மாகாண சபைத் தேர்தலை நடத்துவதன் முக்கியத்துவம் தொடர்பில் கருத்து வௌியிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நியூ ஒலிம்பிக் விளையாட்டு கழகம் நடத்திய சித்திரை புது வருட கலாச்சார விளையாட்டு விழாவிற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன், இலங்கை தமிழரசு கட்சியின் உடைய பதில் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன், பதில் தலைவர் சி வி கே சிவஞானம் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது தமிழர்களுடைய பல்வேறு கலை கலாச்சாரங்கள், பின்னி பின்னிப்பிணைந்த பல்வேறு கிராமிய விளையாட்டுகளும் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றுமை குறிப்பிடத்தக்க இதன்போது வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு பரிசில்களும் பாராட்டுகளும் வழங்கப்பட்டன.