பண்ருட்டி அருகே மது போதையில் 80 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த, 4 பேர் மீது பொலிஸார் வழக்குப் பதிந்தனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி. இவர் நேற்று மாலை 4:00 மணிக்கு, அருகில் உள்ள சவுக்கு தோப்புக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது, அடையாளம் தெரியாத 4 பேர், மூதாட்டியை பலாத்காரம் செய்து, அவர் அணிந்திருந்த 4 கிராம் கம்மல், 2 கிராம் மூக்குத்தியை பறித்துச் சென்றனர்.
மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே சென்றவர்கள், அவரை மீட்டு மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவகல்லுாரியில் சேர்த்தனர். பண்ருட்டி பொலிஸார் நடத்திய விசாரணையில், 35வயது முதல் 40 வயது மதிக்கத்தக்க 4 பேர், குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
மூதாட்டியின் பாலியல் பலாத்கார சம்பவம் கிராமத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.