கிளிநொச்சி, பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னார் வீதியில் உள்ள பூநகரி மத்திய கல்லூரிக்கு அருகாமையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. வேன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனம் தீக்கிரையாகியுள்ளது. இந்தவிபத்தில் 5 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இடுகைகள்