1970இல் கையெழுத்திட்ட அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் மசோதாவை ஈரான் தயாரிப்பது ஏன்?
எல்லா எச்சரிக்கைகளை தாண்டியும் தொடர்ந்து இஸ்ரேலை தாக்கும் ஈரான் ஏவுகணைகள் - ஐந்தாவது நாளாக தொடரும் போர்!
ஈரானின் அரசு செய்தி நிறுவனத்தின் கட்டடத்தை இஸ்ரேல் தாக்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேலின் N12 மற்றும் N14 செய்தி சேனல்களை விட்டு அங்குள்ள பணியாளர்கள் வெளியேறுமாறு கடுமையான எச்சரிக்கையை ஈரான் வெளியிட்டுள்ளது.
அத்தோடு, 1970இல் கையெழுத்திட்ட அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் மசோதாவை ஈரான் தயாரித்து வருவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. சமீபத்திய பதற்றமான சூழலே இந்த முடிவை எடுக்கக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தெஹ்ரான் மக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவுகளைப் பிறப்பித்த நிலையில். ”ஈரான் அரசைக் கவிழ்க்க இஸ்ரேல் முயலவில்லை. ஆனால், அது நடந்தால் ஆச்சரியப்பட மாட்டேன்” என நெதன்யாகு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.