கல்கமுவ, பாலுகடவல வாவியில் நீராடச் சென்ற இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.