தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி மன்றங்களில் ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நிர்வாகங்களை அமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதன் போது, எதிர்க்கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்துள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்ற ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி தலதா அதுகோரல ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.