வெசாக்கை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் இணைந்து வீட்டை, மின்விளக்குகளால் அலங்கரித்துக்கொண்டிருந்த ஒன்பது வயதான சிறுமி, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம், களுத்துறை மொரகஹஹேன பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மின் விளக்குகளுக்கு மின் இணைப்பை வழங்க முயற்சித்த போது அச்சிறுமி மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
காயமடைந்த சிறுமி பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.