அக்கரைபற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விசேட பயிற்சி செயலமர்வு தொடர்பாக பாடசாலை மாணவி ஒருவருக்கு அறிவிப்பதற்காக, மாணவியின் வீட்டிற்கு சென்ற ஆசிரியர் மற்றும் அதிபர் தாக்கியத்தை கண்டித்து இன்று (26) திங்கட்கிழமை திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட ஆசிரியர்கள் தம்பிலுவில் மத்திய கல்லூரி முன்பாக இருந்து ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுத்து திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரம் வரை சென்று கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.