புல்மோட்டை - திருகோணமலை பிரதான வீதியின் கும்புறுப்பிட்டி பகுதியில் கடும் காற்று காரணமாக வீதியில் பயணித்திக் கொண்டிருந்த ஓட்டோ புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
புல்மோட்டையில் இருந்து திருகோணமலை நோக்கி மீன் எடுத்துச் சென்ற ஓட்டோவே இவ்வாறு விபத்தில் சிக்கியது.
சாரதி எவ்வித காயங்களும் இன்றி தப்பியுள்ளார்.