புதிய போப்பாண்டவராக அமெரிக்கரான ரொபர்ட் பிரீவோஸ்ட் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என வத்திக்கான் அறிவித்துள்ளது.
உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய வாக்கெடுப்பு நேற்று முடிவடைந்ததுடன், வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலய புகைபோக்கியில் இருந்து வெள்ளைப்புகை வெளியானது.
வெளியான வெள்ளைப்புகை சமிஞ்சையின் படி, கரதினால்கள் போப் பிரான்சிஸுக்குப் பிறகு ஒரு வாரிசைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது உறுயானது.
இதன்படி, புதிய போப் அமெரிக்கரான ரொபர்ட் பிரீவோஸ்ட் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என வத்திக்கான் அறிவித்துள்ளது.
இவர் வரலாற்றிலேயே முதல் முறையாக தெரிவு செய்யபப்பட்ட முதல் அமெரிக்க போப்பாண்டவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து புதிய போப்பாண்டவர் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தை நோக்கிய மாடியில் தோன்றினார்.
முன்னதாக, புதிய போப் சிஸ்டைன் தேவாலயத்திற்கு அடுத்துள்ள ஒரு சிறிய அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வெள்ளை போப்பாண்டவர் அங்கிகள் அணிவிக்கப்பட்டுள்ளார்.
70 நாடுகளிலிருந்து வந்த 133 கர்தினால்கள் இந்த இரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.