உடலில் மிக முக்கியமான அங்கமான மூளையில் ஏற்படும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வு மிக முக்கியமான விடயம்.
விபத்தொன்றில் மூளையில் பாதிப்பு ஏற்பட்டால் அது வாழ்நாள் முழுவதும் ஏனைய அங்கங்கள் செயற்பாடுகளையும் பாதிக்கும் என்பதை நாம் அறிவோம்.
ஆகவே விபத்தொன்றை தவிர்க்க அனைத்து முன் பாதுகாப்பு பற்றி எப்போதும் கரிசனையாக இருக்க வேண்டும்.
விபத்து ஏற்பட்டு விட்டால் உடனடி பொருத்தமான சிகிச்சை பற்றி அறிந்திருக்க வேண்டும்.
அவ்வாறு மூலையில் ஏற்படுகின்ற ஏனைய நோய்கள் பற்றியும் நோய்கள் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் பற்றியும் நோய் ஏற்பட்டுவிட்டால் கிரமமான பொருத்தமான சிகிச்சை பற்றியும் அவதானமாக இருக்க வேண்டும்.
உடற்பயிற்சியை செய்வதன் மூலம் பல்வேறு தொற்றா நோய்கள் ( High blood pressure, Diabetes, Cancer, Stroke, Heart attack, etc ) ஏற்படுவதை தடுக்க முடியும்.
பல்வேறு தொற்றா நோய்களை தடுத்தால் மூளையில் பின்னாளில் ஏற்படும் பல வியாதிகளையும் தடுக்க முடியும்.
ஆகவே இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இன்று யாழ்ப்பாணத்தில் விழிப்புணர்வு நடை பயணம் மற்றும் ஓட்டம் நடைபெற்றது.
பல மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்து மேற்படி விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டாடினார்கள்.