வயம்ப தேசிய கல்வியியற் கல்லூரியில் இரண்டாம் வருட மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்துவதற்காக விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த விசாரணைக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் அதுதொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரியின் முதல்வரிடமிருந்து விரிவான அறிக்கை ஒன்று பெறப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்தில் விசாரணை ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், அனைத்து தேசிய கல்வியியற் கல்லூரி முறைமையின் நிர்வாக மற்றும் கல்வி நடவடிக்கைகளை மறு ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களை உடனடியாக மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.