பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்.!!!

2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளை மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது. 

அதன்படி, குறித்த விண்ணப்பங்களை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை இணையவழியில் சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைத் திணைக்களம் (Department of Examinations) தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான https://www.doenets.lk க்கு பிரவேசித்து, Our Services பகுதியின் கீழ் உள்ள “Exam Information Centre” என்பதை கிளிக் செய்து விண்ணபிக்கலாம்.

பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ மொபைல் செயலி (DOE) மூலம் “Exam Information Centre” என்பதை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

https://onlineexams.gov.lk/eic இணையதளத்தை அணுகுவதன் மூலமும் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே மீள்பரிசீலனைக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

இதுவரை விண்ணப்பிக்க முடியாதவர்கள், விண்ணப்பிக்கும்போது ஏதேனும் தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்பட்டால், பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் உதவி பெறலாம்: இணைய வழி கிளை : 0113661122, 0113671568 பாடசாலை பரீட்சைகள் மதிப்பீட்டு கிளை: 0112785231, 0112785681 title  என ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.