குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று வரணி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் வரணி வடக்கை சேர்ந்த 19 வயது யுவதியே தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்காலத்தில் வரணி பகுதியில் தற்கொலை சடுதியாக அதிகரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.