நந்திகடல் களப்பிலிருந்து இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

மாத்தளன் நந்திகடல் களப்பில் இருந்து இன்று திங்கட்கிழமை (05) இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்டப்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணையை வசிப்பிடமாக கொண்ட 27 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் ஆவார்.

இவர் மூன்று நாட்களாக காணாமல் போயுள்ள நிலையில் இன்றைய தினம் நந்திக்கடல் களப்பிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் நேரடியாக சென்று சடலத்தை பார்வையிட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து சென்று உடற்கூற்று பரிசாதனை செய்த பின்னர் உறவினர்களிடம் கையளிக்க உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணையை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.