நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் இன்று அறிவித்துள்ளது.
இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.