கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ததை மேற்கொண்ட தீர்மானத்துடன் தொடர்புடைய ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பை ரத்து செய்யுமாறு கோரி, சந்தியா எக்னெலிகொடவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் ரஜித் பெரேரா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், இந்த மனுவை 2025 ஓகஸ்ட் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டது.