இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு கடந்த ஏப்ரல் மாதம் 3.1 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 6.32 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 6.53 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்ததாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.