பாணந்துறை, மதுபிட்டிய பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
9 மி.மீ. பிஸ்டல் துப்பாக்கியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பாணந்துறைப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.