துபாய் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு அம்பலம்: ரூ. 1.8 கோடி பணம் பறிமுதல் - 8 பேர் கைது
துபாயில் இருந்து இயங்கியதாகக் கூறப்படும் ஒரு போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை தொடுவாவ பொலிஸார் பிடித்துள்ளனர். இந்த விசாரணையின் போது, 1.8 கோடி ரூபாய் ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடல் மார்க்கமாக போதைப்பொருள் கொள்கலனைக் கொண்டு சென்றவர்களுக்குச் செலுத்தப்படவிருந்த பணம் இது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.