வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 18ம் கட்டை பிரதேசத்தில் விபத்தில் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் மரணமடைந்துள்ளார்.
இவர் பற்றிய எந்தத் தகவலும் தெரியாததன் காரணத்தினால், அடையாளம் தெரிந்தால் வாழைச்சேனை வைத்தியசாலை பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.