அரசாங்கத்தால் இறக்குமதி செய்யப்படும் ஒரு தொகை உப்பு இன்று(22) நாட்டிற்கு கிடைக்கும் என வர்த்தகம், வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் முதல் தட்டுப்பாடின்றி உப்பு விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு பதில் அமைச்சர் ஆர்.எம்.ஜயவர்தன தெரிவித்தார்.
30,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி செய்யப்படுகின்றது.