இலங்கையில் பாதாள உலக வன்முறைகள் கூர்மையாக அதிகரித்துள்ளதாகவும், இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 38 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
பெரும்பாலான சம்பவங்கள் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலிருந்து பதிவாகியுள்ளன என்றும் அவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களால் பெருகிய மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகள் என வும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுக்கு இடையே அதிகரித்து வரும் மோதல்கள் மற்றும் போட்டியானது, பாதாள உலகக் கும்பல்களின் இலக்கு வைத்து இடம்பெறும் தாக்குதல்கள் காரணமாகவே வன்முறை ஏற்பட்டதாக சட்ட அமுலாக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்தக் குற்றச் செயல் வலையமைப்புகளை அகற்றவும் மேலும் இரத்தக்களரிகளைத் தடுக்கவும் பொலிஸ் தரப்பு முயற்சிகளை தற்போது முடுக்கி விட்டுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு வலுவான சமூக ஒத்துழைப்பு மற்றும் சட்டமன்ற ஆதரவையும் அதிகாரிகள் கோரியுள்ளனர்.
விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.