முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்
அந்தவகையில்முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் 18.05.2025இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்லில் கரைதுறைப்பற்று பிரதேசசபையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றியீட்டியவரான இரத்தினம் ஜெகதீசன் அவர்களும் இந்த அஞ்சலியில் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.