கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரான சமிந்து தில்ஷான் பியுமாங்கவை ஜூன் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக தடுத்து வைக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு தலைமை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
மேலும், துப்பாக்கிதாரி தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகிக்கப்படும் வேன் ஓட்டுநர் மகேஷ் சம்பத் பிரியதர்ஷனவை மே 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.