வெட்டுக் காயங்களுடன் குடும்பப் பெண் மர்மமான முறையில் சடலமாக மீட்பு!

வெட்டுக் காயங்களுடன் மர்மமான முறையில்  குடும்பப் பெண் ஒருவரின் சடலம்  பெரிய நீலாவணை பொலிஸாரால் இன்று (30) மீட்கப்பட்டுள்ளது.

பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 37 வயது மதிக்கத்தக்க பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இரு பிள்ளைகளின் தாயான குறித்த பெண்ணின் கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதில் பல வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றன ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மரணமடைந்த குடும்பப் பெண்ணின் கணவர் வெளிநாடு ஒன்றில் தொழில் நிமிர்த்தம் தங்கியுள்ளார்.

கொலை இடம்பெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளிகளை சேமிக்கும் கருவி  கொலையாளியால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை தொடர்பில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மேற்பார்வை செய்தார். அம்பாறை தடயவியல் பொலிஸார் உட்பட பெரிய நீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.