71 வயது முதியவரை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று பலாலியில் வைத்து கைது செய்துள்ளனர்.

 இந்திய அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த 71 வயது முதியவரை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று பலாலியில் வைத்து கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட முதியவர் இன்று  மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஜூன் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த முதியவரிடம் நாடு திரும்புவதற்குத் தேவையான அனைத்து ஆவணங்கள் இருந்தும், சர்வதேச சட்டப்படி அவர் ஒரு அகதி என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் அவரை பிணையில் விடுவிக்க எதிர்ப்புத் தெரிவித்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவமானது நாடு திரும்புவதற்கு தயாராக இருக்கும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள், நாட்டிற்கு பயந்து வராமல் இருப்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளா? என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரான ஏம்.ஏ.சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.


கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.