நாவல திறந்தவெளி பல்கலைக்கழகம் அருகே இன்று காலை நான்கு வாகனங்கள் மோதிக்கொண்டதில் நால்வர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நான்கு வாகனங்களும் நுகேகொட நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துக்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.