பல்கலைக்கழக மாணவன் மரணம்: 20 பேரிடம் வாக்குமூலம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் மரணம் தொடர்பாக 20 மாணவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவரின் மரணம் பகடிவதை வன்கொடுமையால் ஏற்பட்டதாக சந்தேகிக்கும் பல்கலைக்கழக மாணவ. ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையிலும், இறந்த மாணவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையிலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பகடிவதை ஒரு குற்றம் என்பதால், அத்தகைய குற்றம் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் மற்றும் சப்ரகமுவா பல்கலைக்கழகமும் இந்த மரணம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளன. 

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.