துப்பாக்கி சண்டையில் 10 தீவிரவாதிகள் உயிரிழப்பு: 7 தீவிரவாதிகள் கைது

மணிப்​பூரின் சந்​தேல் மாவட்​டத்​தில் அசாம் ரைபிள்ஸ் படை​யுடன் நடந்த துப்​பாக்​கிச் சண்​டை​யில் 10 தீவிர​வா​தி​கள் கொல்​லப்​பட்டுள்ளனர்.

இதுகுறித்து ‘எக்​ஸ்’ தளத்​தில் இராணுவத்​தின் கிழக்கு படைப்​பிரிவு வெளி​யிட்​டுள்ள பதி​வில், 

“இந்​தியா - மியான்​மர் எல்​லைக்கு அரு​கில், மணிப்​பூரின் சந்​தேல் மாவட்​டம், நியூ சாம்​தால் கிராமத்​தில் ஆயுதமேந்​திய நபர்​களின் நடமாட்​டம் இருப்​ப​தாக புதன்​கிழமை உளவுத் தகவல்​கள் கிடைத்​தன. இதன் அடிப்​படை​யில் அசாம் ரைபிள்ஸ் படை​யினர் அங்கு விரைந்து சென்று தேடு​தல் வேட்​டை​யில் ஈடு​பட்​டனர்.

இதில் ஏற்​பட்ட துப்​பாக்​கிச் சண்​டை​யில் 10 தீவிர​வா​தி​கள் கொல்​லப்​பட்​டனர். சம்பவ இடத்​தில் இருந்து கணிச​மான அளவு ஆயுதங்​கள் கைப்​பற்​றப்​பட்​டன.” என்று தெரி​வித்​துள்​ளது. 

இது தொடர்​பாக கொஹி​மா​வில் உள்ள இராணுவ செய்​தித் தொடர்​பாளர் கூறுகை​யில், “அங்கு இராணுவ நடவடிக்கை தொடர்​கிறது. அது முடிவுக்கு வந்​தவுடன் அது தொடர்​பான தகவல்​கள் பகிர்ந்து கொள்​ளப்​படும்.” என்​றார். 

இதற்​கிடை​யில் மணிப்​பூரில் பல்​வேறு அமைப்​பு​களை சேர்ந்த 7 தீவிர​வா​தி​கள் கைது செய்​யப்​பட்​டுள்ளனர் ​என பொலிஸார் நேற்று தெரி​வித்​தனர்.

தவு​பால், காக்​சிங், விஷ்ணுபூர். சூரசந்த்​பூர் ஆகிய மாவட்​டங்​களில் இவர்​கள் கடந்த செவ்​வாய் மற்​றும் புதன்​கிழமை கைது செய்யப்​பட்​ட​னர் என பொலிஸார் கூறினர். இவர்​களிடம் இருந்து துப்​பாக்​கி​கள் மற்​றும் தோட்​டாக்​களை பொலிஸார்​ பறி​முதல்​ செய்துள்ளனர்​.

கருத்துரையிடுக

 உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

 உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள் .

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.