தாமரைப்பூ பறித்ததாலா தவறியது உயிர்! சந்தேகத்திற்கு இடமான இளைஞனின் பரிதாப மரணம்.


யாழ்ப்பாணம் கொடிகாமம் - வரணி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த 23 வயதுடைய இளைஞன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பொலிஸாரும் அவரின் மரணத்தில் தொடர்பு இருப்பதாகவும் அந்த இளைஞனின் பெற்றோரும் உறவினர்களும் அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தியுள்ளனர்.

அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,கடந்த வியாழக்கிழமை எனது மகன் குளித்துவிட்டு வந்தவேளை 3.00 மணிக்கு பின்னர் எனது மகனை அவரது நண்பர் அழைத்துச் சென்றார்.

அவருடன் சென்றுகொண்டிருந்தபோது இன்னொரு நண்பர் குளிக்க வருமாறு தொலைபேசியில் கூறியவேளை எனது மகன் அவரிடம் சென்றுள்ளார். இதன்போது கொடிகாமம் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அவர்களுடன் இருந்துள்ளார்.

தாமரை பூ பரிப்பதற்காக சென்று நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறியது பொய்.அவரது சடலம் தாண்டு இருந்த இடத்தில் ஒரு நீளமான மீற்றர் கட்டை ஒன்று குற்றப்பட்டு இருந்தது. அப்படி அவர் தாழ்ந்திருந்தால் அத்த கட்டையில் பிடித்து ஏறியிருப்பார்.

மந்திகை வைத்தியசாலையில் எங்களது பிள்ளையின் சடலம் இருப்பதாக கேள்வியுற்று நாங்கள் அங்கே சென்றவேளை, அவரை வைத்தியசாலையில் சேர்ப்பித்தவர்கள் இருவர் பொய்யான பெயர் கொடுத்துள்ளனர் என்ற விடயம் தெரியவந்தது.

ஏன் பொய்யான பெயர் கொடுக்க வேண்டும்? அன்றையதினம் அவர் யாருடன் பேசினாரோ அவ்வளவு விபரங்களும் கைபேசியில் இருந்து அழிக்கப்பட்டிருந்தது. எங்களுடைய தம்பி ஒருவர் கைபேசியை வாங்கும் போது அங்கிருந்த ஒருவர் கைபேசியை பறித்தார், ஒரு மணித்தியாலம் அந்த கைப்பேசியை வழங்கவில்லை.

சடலம் தாண்டு இருந்த இடத்தை நீதிவானுக்கு காட்டிய பொலிஸார் பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டனர். பிறகு அவர்கள் வரவில்லை. எங்களிடம் விசாரணைகளுக்கு வந்த பொலிஸார், நீதிமன்றத்தில் நீங்கள் சட்டத்தரணி வைக்க வேண்டாம், நாங்கள் உங்களுக்காக வாதாடுகின்றோம் என்றனர். இவ்வாறு இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்படும் நிலையில் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.