அனுதினம் மனைவியை கொடுமைபடுத்திய கணவன்-வேதனை தாங்காது தூக்கில் சரணடைந்த மனைவி..?

இந்தியாவின் மகாராஷ்டிராவில் ஆண் குழந்தை பிறக்காததற்காக தனது 25 வயது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 தானே மாவட்டத்தில் உள்ள உல்ஹாஸ் நகரில் வசிப்பவர் 33 வயதான விஷால் கவாய். இவர் தர்ஷனா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் தனது மனைவியின் பெற்றோரிடம் இருந்து விஷால் கவாய் தொடர்ந்து பணம் கேட்டு வந்துள்ளார்.

 

இதற்கிடையே தர்ஷனாவுக்கு இரண்டு மகள்கள் பிறந்த பிறகு அவரது துன்புறுத்தல் மோசமடைந்தது. ஆண் குழந்தையை பெற்றெடுக்காததற்காக விஷால் தர்ஷனாவை மனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்.

 

இதனால் கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி வீட்டின் கூரையில் தர்ஷனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 

இந்நிலையில் இந்திய சட்டப்படி பாரதீய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் 108 (தற்கொலைக்குத் தூண்டுதல்), 80 (வரதட்சணை மரணம்), 115(2) (காயப்படுத்துதல்) மற்றும் 352 (வேண்டுமென்றே அவமதித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் கணவர் விஷாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.