பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த காலப்பகுதியில் போக்குவரத்துச் சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வீதி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.
அத்தோடு, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மூச்சுப் பரிசோதனை கருவிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.