யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாதியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கடமை புரியும், சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் கிருஷ்ணவேணி (வயது 52) என்ற தாதியரே உயிரிழந்தள்ளார்.
கடந்த 26ஆம் திகதி இரவு கடமைக்காக மோட்டார் சைக்கிளில் தெல்லிப்பழை வைத்தியசாலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த வேளை விளான் சந்தியில் மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த தாதிய உத்தியோகத்தர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
அந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.