தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மகளிர் தினம் இன்றைய (4)தினம் நீர் கொழும்பில் இடம்பெற்றது
நீர் கொழும்பு கொப்புறா தம்பியில் பேரணி ஆரம்பித்து றுக்குமணி மண்டபம் நோக்கி நகர்ந்தது
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பெண்கள் அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணியில் பெண்களுக்கான சம உரிமை,மீனவ சமூகத்திற்கான காணி, வீடுகளுக்கான உரிமை பத்திரங்கள் வழங்க வலியுறுத்தப்பட்டதுடன் அரசியல் தலையீடுகள்,வளங்கள் சுரண்டல் போன்ற விடயங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் பேரணியில் ஈடுபட்டவர்கள் கோரிக்கையாக முன்வைத்தனர்
இந்நிகழ்வில் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் இருந்து தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்,காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் பிரதிநிதிகள்,பல சமூக மட்ட அமைப்புக்கள்,கலந்து கொண்டதுடன் தென்னிலங்கையை சேர்ந்த மகளிர் அமைப்புகளும் இணைந்திருந்தன.