தெரணியகல பிரதேச செயலாளர் பிரிவின் பண்டாஹ கிராம சேவைப் பிரிவில், மண்சரிவு காரணமாக, சுமார் 10 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன.
மழை காரணமாக தெரணியகலையில் இருந்து மாலிபொட பகுதிக்கு செல்லும் வீதி, செவ்வாய்க்கிழமை (08) மூடப்பட்டது.
பிற்பகலில் ஏற்பட்ட பாறை சரிவு காரணமாக அவ்வீதி மூடப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அருகில் இருந்த ஒரு வீட்டின் கூரையில் பாறைகள் விழுந்தமையால் கூரை சேதமடைந்தது, சிறு காயங்களுடன் ஒருவர் தெரணியகல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இப்பகுதியில் ஏற்படக்கூடிய பேரழிவு காரணமாக சுமார் 10 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன.