சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்குப் பயணித்த பொது மக்கள் மீண்டும் தலைநகருக்குத் திரும்பும் வகையில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டத்தினை முன்னெடுப்பதற்குத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ள இந்த விசேட போக்குவரத்து திட்டத்தின்படி, மேலதிகமாக 800 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பொது மக்களின் நலன் கருதி நாளை முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
வெளிமாவட்டங்களுக்குச் சென்ற பயணிகள் மீண்டும் தலைநகருக்குத் திரும்பும் வகையில் 18, 19 மற்றும் 20ஆம் திகதிகளில் விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.