யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரை பகுதி சுற்றுச்சூழல் மாசடைந்து காணப்படுவதாக சுற்றுலாப் பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்
யாழ் பண்ணை கடற்கரைக்கு நாளாந்தம் உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவாக வந்து செல்வதுடன் யாழ் கோட்டையை அண்டிய பண்ணைக் கடற்கரை பகுதி சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இடமாகவும் திகழ்கின்றது
இந்நிலையில் பண்ணைக் கடற்கரையின் சுற்றுச்சூழல் மாசடைந்து காணப்படுவதாகவும் இதனால் சுற்றுலா பயணிகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாகவும் அங்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
பிளாஸ்டிக் பொருட்களை போடுவதற்காக குப்பை தொட்டிகள் பண்ணை கடற்கரை பகுதியில் காணப்படுகின்ற போதும் இவ்வாறு சிலர் கடலில் எறிவதால் அப்பகுதி மாசுபட்டுள்ளதாகவும் யாழ் மாநகர சபை கவனத்தில் எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தனர்.