யாழ் கரை நகரில் சற்று முன் வீதியின் இரு புறமும் பேரூந்தை நிறுத்தி வைத்து கொண்டு கதை பேசிய தனியார் அரசபேரூந்து சாரதிகள்.
இதை கவனியாமால் சந்தைக்கு மீன் கொண்டு சென்ற பெண் மயிரிழையில் தப்பியுள்ளார்.
அன்மைக்காலமாக வாரிவளவுக்கு அருகிலும் ஏனைய காரைநகர் வீதிகளிலும் பேரூந்து சாரதிகளின் இந்த ஒழுக்கமற்ற செயலால் வீதிப்பயணிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
காரைநகர் சிறிய வீதியில் இவ்வாறு இரு புறமும் பேரூந்துகளை இடைநிறுத்தி கதை அளப்பது அநேக வேளைகளில் நடந்து வருகிறது.
இதனால் ஏனைய பயணிகள் பாதசாரிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.
உரியவர்கள் இவர்களின் அநாகரிகமான செயற்பாட்டிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.