பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் ஏகல பகுதியை சேர்ந்த 33 வயதுடையவர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழ்ந்தவர் சந்தேக நபருடன் சுமார் 4 மாதங்களாக ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும், வாக்குவாதம் அதிகரித்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
35 வயதுடைய சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.