கழிவறைக்கு முன்னால் இளம் தாய்க்கு நேர்ந்த விபரீதம்... இலங்கையில் பதற வைத்த சம்பவம்


கொழும்பு 10, மாளிகாவத்தையில், சிசுவை பிரசவித்த நிலையில் தாயும் , பிறந்த குழந்தையும், வீட்டின் கழிப்பறைக்கு முன்னால் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்துள்ளதாக என மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர், கொழும்பு 10, மாளிகாவத்தையில் வசிக்கும் இரண்டு குழந்தைகளின் தாயார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இறந்த பெண் வீட்டின் கழிப்பறைக்கு முன்னால் தரையில் முகம் குப்புறக் கிடந்ததாக கணவர் அளித்த வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறத்த பெண்ணின் மைத்துனரிடமிருந்து செய்தி வந்ததும், அவர்கள் வீட்டிற்குச் சென்று வீட்டைப் சோதித்தனர், பெண்ணின் உடலிலும் தரையிலும் அதிக அளவு இரத்தம் இருப்பதைக் கண்டனர்.

இறந்த மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை அந்த நேரத்தில் அவரது காலடியில் இருந்ததாகவும், குழந்தை தொப்புள் கொடியை வெட்டாமல் ஒரு துணியில் சுற்றப்பட்டிருந்ததாகவும், மனைவியும் குழந்தையும் முச்சக்கர வண்டியில் பொரளை பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்களைப் பரிசோதித்த பிறகு, அங்குள்ள மருத்துவர்கள், இருவரும் இறந்துவிட்டதாக அறிவித்தனர். தாய் - சிசு மரணங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.