வவுனியா பண்டாரிக்குளத்தில் குடும்பஸ்தர் ஒருவரின் பசுமாட்டை திருடி இறைச்சிக்காக வெட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இரண்டு மாதங்களில் கன்றை ஈன்றெடுக்கும் நிலையில் காணப்பட்ட பசு மாட்டை வெட்டி இறச்சியை எடுத்துவிட்டு தலை, எலும்பு, கழிவுகளை பண்டாரிகுள கட்டு ஓரத்தில் வீசி சென்றுள்ளார்கள்.
குறித்த பசு மாட்டின் பெறுமதி 250000/- ரூபா என தெரிவிக்கப்பட்ட அதேவேளை
உரிமையாளரால் சம்பவம் தொடர்பாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.