இருபது வயது இளைஞனின் இதயம் நொறுங்கிய செயல்! இரும்புக் கம்பியால் நிகழ்ந்த தந்தையின் மரணம்!


கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் உருகொடவத்தை பகுதியில் மகன் ஒருவர் தனது தந்தையை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (18) இரவு இடம்பெற்றதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் உருகொடவத்தை, அவிசாவளை வீதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இறந்தவருக்கும் அவரது மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, மகன் இரும்பு கம்பியால் இறந்தவரின் தலையில் அடித்துள்ளார். தாக்குதலில் காயமடைந்த தந்தை கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சடலம் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், குற்றத்தைச் செய்த இறந்தவரின் 20 வயது மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.