கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று நடைபெறவுள்ள விசேட வழிபாடு மற்றும் ஊர்வலம் காரணமாக அந்தப் பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
கடலோர காவல்துறை பிரிவுக்குட்பட்ட பல வீதிகள் இன்று காலை 7 மணி முதல் 11:45 வரை இடைக்கிடையே மூடப்படுமென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, முகத்துவாரத்தில் இருந்து புறக்கோட்டை வரையான வீதியும், கிறிஸ்டி பெரேரா சுற்றுவட்டத்தில் இருந்து கொச்சிக்கடை தேவாலயம் வரையிலான வீதியும் மூடப்படவுள்ளன.