சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட 500 வகையான பொருள்களின் விலைகளை குறைத்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்தது.
அரிசி, டின் மீன், சிவப்பு சீனி, பெரிய வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்ள்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
மேற்படி பொருள்களை சந்தை விலையை விடவும் மிகக்குறைந்த விலையில் சதொச ஊடாக இம்மாதம் முழுவதும் பொதுமக்கள் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.