வட மாகாண விளையாட்டு திணைக்களத்தால் நடாத்தப்பட்ட மாகாணமட்ட திறந்த(open) மல்யுத்த (wrestling) போட்டி இன்றைய தினம் (06) முல்லைத்தீவு மாவட்ட உள்ளக விளையாடரங்கில் நடைபெற்றது.
இதில் முல்லைத்தீவு மாவட்ட , ஆண்கள் அணியினரும், பெண்கள் அணியினரும் முதலிடம் பெற்றுள்ளனர். அத்துடன் தொடர்ந்து ஆறு வருடங்களாக மாகாணமட்ட திறந்த(open) மல்யுத்த(wrestling) போட்டியில் முல்லைத்தீவு மாவட்டம் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் மொத்தமாக 15 தங்கப் பதக்கமும் 3 வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இரண்டாம் இடத்தினை யாழ்ப்பாண மாவட்டமும் மூன்றாம் இடத்தினை வவுனியா மாவட்டமும் பெற்றுக்கொண்டுள்ளன.