இலங்கையின் தெற்கு அதிவேக வீதியில் சிறுவன் ஒருவர் வாகனம் ஓட்டும் காணொளிக்காட்சிகள் வெளியாகியுள்ளன.
குறித்த சிறுவன், ஓட்டுநரின் மடியில் அமர்ந்து வாகனத்தை ஓட்டுவது இந்த காணொளியில் காட்டப்படுகிறது.
இந்த காணொளிக்காட்சிகளை, அதே வீதியில் பயணித்த வாகன ஓட்டுநர் ஒருவர் படம்பிடித்துள்ளார்.
இந்நிலையில், அதிவேக வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்ற சரியான இடம் தெரியவராத நிலையில், இது தொடர்பில் சமூக ஆர்வளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.