தேசிய மக்கள் சக்தியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் மரணம் அடைந்தமை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மனதை உருக்கும் வகையிலான இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அவர் இந்த பதிவினை இட்டுள்ளார்.
கடந்த பொது தேர்தலில் கேகாலை மாவட்டத்தின் ருவான்வெல்ல தொகுதியில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு கோசல வெற்றியிருந்தார்.
அவர் கடந்த 6ம் திகதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார்.
இறக்கும் போது அவருக்கு 38 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
பயணம் தொடங்கியது மட்டுமே நீ இல்லாத இடைவெளி சுமையானது நீ வேண்டிய தேசத்தை கட்டி எழுப்ப நாம் அர்ப்பணிப்புடன் உறுதி பூண்டுள்ளோம் சகோதரர் கோசல உங்களுக்கு புரட்சிகரமான வணக்கங்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது இரங்கல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.