தென்கொரிய ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரிய ஜனாதிபதியாகப் பதவி வகித்த யூன் சுக்-யோல் அண்மையில் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
பதவி நீக்க நடவடிக்கையை அந்த நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் ஏகமனதாக உறுதி செய்ததைத் தொடர்ந்தே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதன் மூலம் தென்கொரியாவில், 60 நாட்களுக்குள் மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
எனவே 60 நாள் கால கட்டத்தின் கடைசி நாளான ஜூன் 3 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் எதிர்வரும் ஜூன் 3 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என தென்கொரியாவின் இடைக்கால ஜனாதிபதி அறிவித்துள்ளார்.