அனுராதபுரம் போதனா வைத்தியசாலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு நேற்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சந்தேக நபரை டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்துமாறும், கிடைக்கப்பெறும் உரிய மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறும் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் விசாரணைகள் நிறைவு பெறவில்லை என காவல்துறையினர் நீதிமன்றில் நேற்று அறிவித்தனர்.
இதனைக் கருத்திற்கொண்டு குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டார்.